Webdunia - Bharat's app for daily news and videos

Install App

I Love You என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயதில் வந்த காதல்… அனுஷ்கா பகிர்வு!

vinoth
புதன், 9 ஜூலை 2025 (14:11 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ‘காத்தி’ திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார்.  விக்ரம் பிரபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸாகாமல் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய பள்ளிப் பருவ காதல் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு மாணவன் என்னிடம் ‘உயிருக்கு உயிராகக் காதலிப்பதாக’ ப்ரபோஸ் செய்தேன். ஐ லவ் யூ என்ற வார்த்தைக்குக் கூட அர்த்தம் தெரியாத அந்த வயதிலும் அதை ஏற்றுக்கொண்டேன். அது ஒரு ஆழகிய நினைவாக இப்போதும் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சாய்பல்லவியின் முதல் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுக்கு மாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!

டி காப்ரியோவுக்கு டைட்டானிக்… எனக்கு ‘அந்த’ படம் – விஜய் தேவரகொண்டா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments