கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பெரிய நடிகர்கள் இல்லாமல் நஸ்லின், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சுமார் 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் ஏடி இயக்கி இருந்திருந்தார்.
இந்த படத்தில் நடித்திருந்த நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் இப்போது சென்சேஷனல் நடிகர்களாகினர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சூட்டோடு சூடாக அறிவித்தது படக்குழு. ஆனால் இதுவரை படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை.
இந்நிலையில் இப்போது இயக்குனர் கிரிஷ் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை பிரேமலு படத்தைத் தயாரித்த நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் பிரேமலு 2 படம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.