Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளைகாப்பு புகைப்படங்களைப் பகிர்ந்த அமலா பால்… ரசிகர்களின் வாழ்த்து மழை!

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (10:03 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த கடாவர் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சிறிய அளவில் கவனம் பெற்றது.

கடந்த ஆண்டு தன்னுடைய காதலரான ஜெகத் தேசாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் அமலா பால் கர்ப்பமாக இருப்பதை அவர் அறிவித்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை அவர் பகிர, தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments