Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலுக்கு வயதில்லை.. 80 வயது முதியவரை காதலித்து கரம்பிடித்த பெண்மணி!

Old man love marriage

Prasanth Karthick

, புதன், 3 ஏப்ரல் 2024 (10:53 IST)
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் காதலித்து திருமணம் வரை செல்லும் சம்பவத்தை போல முதியவர் ஒருவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்துள்ளது.



சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக பல்வேறு நாட்டினரும் ஒருவரோடு ஒருவர் எளிதில் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பேசி பழகி காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தினசரி செய்தியாகி வருகின்றன.

ஆனால் மத்திய பிரதேசத்தில் 80 வயது முதியவருடன் 34 வயது பெண்மணிக்கு ஏற்பட்ட சமூக வலைதள பழக்கம் காதலாக மாறி திருமணமாக முடிந்துள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசம் மாநிலத்தின் அகர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான பலுராம் பக்கிரி. இவருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான ஷீலா இங்கிள் என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது காதலாக மாறிய நிலையில் பலுராமை வயது வித்தியாசம் பார்க்காமல் கரம் பிடித்துள்ளார் ஷீலா இங்கிள். இருவரது விருப்பத்தின்படி நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்துள்ளது. காதலுக்கு கண் இல்லை என்று பொதுவாக பழமொழி சொல்வார்கள். ஆனால் இந்த காதல் கதை ‘காதலுக்கு வயதும் பொருட்டில்லை’ என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.52,000ஐ தொட்டது ஒரு சவரன் தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி