Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் உதவிகள் எதிரொலி.. கேபிஒய் பாலாவின் காதல் வாழ்க்கையில் திடீர் சிக்கல்?

Advertiesment
தொடர் உதவிகள் எதிரொலி.. கேபிஒய் பாலாவின் காதல் வாழ்க்கையில் திடீர் சிக்கல்?

Siva

, புதன், 3 ஏப்ரல் 2024 (16:46 IST)
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தொடர்ந்து சமூக தொண்டுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதுவே அவரது காதல் வாழ்க்கைக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கேபிஒய்  பாலா, ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் பெண்ணின் குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை ஏழை எளியவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து வருவதை அடுத்து பெண்ணின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு பின் வாங்கி விட்டதாகவும் இதனால் பாலாவின் காதல் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பெண்ணின் குடும்பத்தார் சமாதானமாகவில்லை என்றும் பாலா சமூக சேவைகள் செய்வதை நிறுத்தினால் தான் பெண் கொடுப்போம் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதையடுத்து பாலா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’