முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ள அவர் இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது சில படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். விஷ்ணு விஷால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்மிண்ட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவி ரஜினியை சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.