Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த தயாரிப்பாளருக்கு உதவிய நடிகர் விஷால்...ரசிகர்கள் நெகிழ்ச்சி

Advertiesment
மறைந்த தயாரிப்பாளருக்கு உதவிய நடிகர் விஷால்...ரசிகர்கள் நெகிழ்ச்சி
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (20:51 IST)
மறைந்த கே பி பிலிம்ஸ் பாலுவுக்கு நடிகர் விஷால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவுள்ளதாக ஒரு செய்தி வெளியான நிலையில் மறைந்த இயக்குநரின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார் விஷால்.

சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.  அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது விஷால் தனது மேலாளரை அனுப்பி மறைந்த  பாலு சரவணன் தயாரிப்பில் தான் நடிப்பதாக ஒப்புக்கொண்ட பூகை ஸ்டில்ஸை கட்டி நடிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கேபி பிலிம்ஸ் பாலு விஷாலுக்கு சில வருடங்களுக்கு முன்னதாகவே அவரின் முழு சம்பளத்தையும் கொடுத்து ஒரு படம் தயாரிப்பதாக இருந்தாராம்.

இந்நிலையில் அவர் காலமானதால் வரும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஆறு மாதத்தில் மொத்த படப்பிடிப்பை முடித்து, அப்படத்தின் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும்  மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கே வழங்கவுள்ளதாக விஷால் உறுதியளித்துள்ளார்.

மேலும் தயார் பாலு விஷாலுக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ. 50 லட்சம் பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி! நன்மையா? தீமையா ?