Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி! நன்மையா? தீமையா ?

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி! நன்மையா? தீமையா ?
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (20:22 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலைபரவல் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை 56 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர  பழைய கொரோனாவால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்  வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதிவழங்கியுள்ளது.

இதுகுறித்து சில நடிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் பழைய நிலையிலேயே 50% பார்வைகளுடன் திரையரங்குகள் இயங்குவது நன்மை பயக்கும் எனத் தெரிவித்துவருகின்றனர்.

வழக்கமாகச் செல்வது போல்லாமல் இந்தக் கொரொனா காலத்தை மனதில் வைத்து, அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் தக்க பாதுக்காப்பு வழிமுறைகளுடன் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதன் மூலம் சினிமா ரசிகர்கள் இத்தொற்றைத் தவிர்க்கலாம்.

ஏற்கனவே தியேட்டர்கள் குறைந்துவருவது சினிமாத்துறைக்கு பேரதிர்ச்சியாக இருந்துவரும் சூழலில் இந்தக் கொரோனா சூழலில் தியேட்டர்கள் இல்லாமலேயே ஓடிடி வலைதளங்களில் மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் கூட ரிலீசாக ரசிகர்களை ஓரிடத்தில் உட்கார்ந்து பார்க்கும்படி வசதி செய்துகொடுத்தது. ஆனால் தியேட்டர்களையே நம்பி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு மக்களின் பொருளாதாரம் வாழ்வாதார நிலையை நாம் கருத்தில்கொண்டால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நலிவுற்றிருக்கிற தியேட்டர்களின் மீது அரசு சற்றுக் கருணைகாட்டியுள்ளதாகவே எடுத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் இது நடிகர்கள், மற்றும் ரசிகர்களின் வேண்டுகோளும்கூட. எனவே இனிவரும் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாவதன் மூலம் தியேட்டர் கலாச்சாரம் மீண்டுவரும் என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்வோம்.

ஒரு தொழில் என்பது எத்தனையோ மக்களின் எத்தைனயோ குடும்பங்களில் வாழ்வாரத்தையும் பொருளாதாரத்தையும் சார்ந்துள்ளது என்பதை நாம் நினைத்துக்கொண்டு , இப்பெந்தொற்றுக் காலத்தில் தகுந்த முகக்கவசம் சானிடைசர் போன்றவற்றை ரசிகர்கள் கையில் வைத்துக்கொள்வது நல்லது. அதேபோல் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி பெற்றிவிட்ட களிப்புடன் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளையும் சானிடைசர்களையும் உரிய விதத்தில் வைத்து,  கார்பார்க்கிங் கட்டணம், தியேட்டர் கேண்டீனில் உள்ள திண்பண்டங்களின் விலையின் மீது தியேட்டர் நிர்வாகம் கவனம் செலுத்துவதற்கு  இந்தக் கொரோனா கால ஊரடங்கு மற்றும்  50% பார்வையாளர்களுடன் சந்தித்த அனுபவத்தை எல்லாம் ஒரு பாடமாகக் கொண்டால் இனி ரசிகர்கள் மற்றும் இயக்குநர் பாரதிராஜாவின் குற்றச்சாட்டிலிருந்து தியேட்டர்கள் தப்பிக்கலாம்.

மேலும், தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதியென்பது அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் பட ‘’வாத்தி கம்மிங் வீடியோ புரோமோ’’ ரிலீஸ் !