Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்!

‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்!

J.Durai

, சனி, 19 அக்டோபர் 2024 (17:30 IST)
'ஐந்தாம் வேதம்' என்ற ஒரிஜினல் சீரிஸின், இதயம் அதிர வைக்கும் டிரெய்லரை  நடிகர்  விஜய் சேதுபதி வெளியிட்டார்.   
 
இது பார்வையாளர்களை பண்டைய ரகசியங்கள் மற்றும் ஆபத்தான பயணங்கள் அடங்கிய புதிய உலகில் மூழ்கடிக்கிறது. அபிராமி மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், 'மர்மதேசம்' என்ற கிளாசிக் தொடரை உருவாக்கிய புகழ்மிகு இயக்குநர் நாகா இந்த சீரிஸை இயக்கியுள்ளார்.
 
இந்த அதிரடி  த்ரில்லர் சீரிஸில் சாய் தன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  
 
அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்குச் செல்லும்  ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது.  வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. 
 
தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடையப் போராடுவது அவளுக்குத் தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளைச் சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE5 இல் அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்ட்ரீமாக உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சக்சஸ் மீட்டை பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது- பிளாக் படத்தின் வெற்றிச் சந்திப்பில் நெகிழ்ந்த ஜீவா!