ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்த பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜனை நடிகர் விஜய்சேதுபதி அவரது வீட்டிற்கு சென்று பாராட்டியுள்ளார்.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியானது.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் ப்ளூஸ்டார் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இந்த வெற்றியை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்த பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விராஜனை நடிகர் விஜய்சேதுபதி அவரது வீட்டிற்கு சென்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, ப்ருத்விராஜன் தெரிவித்துள்ளதாவது:
''இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து ப்ளூ ஸ்டார் பார்த்ததற்கு நன்றி அண்ணா. படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்கள் படக்குழுவையும், பாராட்டியதற்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.