Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் விஜய் சேதுபதி!

Advertiesment
“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் விஜய் சேதுபதி!

J.Durai

, வெள்ளி, 19 ஜூலை 2024 (14:11 IST)
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும்  “RED FLOWER” திரைப்படம ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார்.
 
இத் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்”
 
ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
 
நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக்  போஸ்டர் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
 
இப்படத்தில் அவரது கதாபாத்திர வடிவமைப்பும் , அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும்.
 
அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதோர்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அவரை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.
 
ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது. காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர்.
 
இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
 
மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.
 
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே.மாணிக்கம் தயாரிக்கும் “Red Flower“மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள அக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.
இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை பற்றி இப்பபடம் பேசும் என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் இருந்து மலையாளம் சென்று கலக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா...