Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஜா இயக்குனர் நித்திலனைப் பாராட்டிய நடிகர் விஜய்!

Success meet
vinoth
வெள்ளி, 19 ஜூலை 2024 (08:02 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடியது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் இந்த படம் திரையரங்கங்களின் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து தற்போது ஓடிடியில் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை அழைத்து நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments