விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு போஸ்டர்களாக வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதி ஆவேசமாக கையில் கத்தியை வைத்துக்கொண்டு இருக்கும் காட்சியும், இன்னொரு போஸ்டரில் இளவயது விஜய் சேதுபதி மஞ்சுவாரியருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி உள்ளன. இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், அட்டக்கத்தி தினேஷ், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல், இளவரசு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.