Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா 42 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல ஹீரோயின்!

சூர்யா 42 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல ஹீரோயின்!
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:56 IST)
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் திஷா பட்டாணி கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், இப்போது சீதாராம் பட புகழ் மிருனாள் தாக்கூர் இரண்டாவது கதாநாயகியாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம்.. ஷூட்டிங் எப்போது?