Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா 42 நடிக்க பாடிபில்டர்கள் தேவை… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சூர்யா 42 நடிக்க பாடிபில்டர்கள் தேவை… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
, சனி, 11 பிப்ரவரி 2023 (08:11 IST)
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் படத்தில் நடிக்க நல்ல உடல்வாகு உள்ள தாடி மற்றும் நீண்ட தலைமுடி உள்ளவர்கள் தேவை என்று சமூகவலைதளங்களில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் பிஜி தீவில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் ''லியோ'' படக்குழுவினர் ..லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புகைப்படம் வைரல்