நடிகர் சிம்புவை ஒரு சுயம்பு என பார்த்திபன் பாராட்டியதை அடுத்து அவரது வீட்டுக்கு சாக்லேட் மற்றும் பூங்கொத்து அனுப்பியுள்ளார் சிம்பு.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	நடிகர் பார்த்திபன் எப்போதும் யாரையும் பாராட்டிப் பேசுவதற்கு தயங்குவதில்லை. சமயங்களில் அவர் பாராட்டுகள் எல்லாம் கொஞ்சம் ஓவரோ என நினைக்கும் அளவுக்குக் கூட இருக்கும். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சிம்பு பற்றிய பேசிய பார்த்திபன் அவரை ஒரு சுயம்பு எனக் கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவலாக கவனிக்கப்பட்டது.
 
									
										
			        							
								
																	இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சுயம்பு’சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார்.Mr Simbu நன்றியதில் Mr பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு” அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!’ எனக் கூறியுள்ளார்.