சாந்தனு தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் இராவணக்கோட்டம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜியில் அவர் நடித்த தங்கம் குறும்படம் நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் இராவணக்கோட்டம் படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சமீபத்தில் நிறைவு செய்தார்.
இந்நிலையில் இன்று நடிகர் சாந்தனு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றது. அதில் “என்னுடைய அங்கிகரிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. யாரும் அந்த பக்கத்தில் இருந்து வரும் செய்திகளுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை” எனக் கூறியுள்ளார்.