Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டத்துல நின்று பந்தா காட்டிய சதீஷை பங்கமா கலாய்த்த ஜீவா - வீடியோ!

கூட்டத்துல நின்று பந்தா காட்டிய சதீஷை பங்கமா கலாய்த்த ஜீவா - வீடியோ!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:46 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு காமெடியான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் செய்ய செல்லும் தோனிக்கு கையசைத்து ஆரவாரம் செய்கின்றனர். ஆனால், அதை தனக்காக செய்தது போல் பந்தா காட்டிய சதீஷை ஜீவா பின்னின்று  "ஹலோ அது தோனிக்கு" என்று கிண்டலடித்து சிரிக்கிறார். இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் பிரைமில் ரிலீஸாகும் நானியின் புதிய படம்