Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் சந்தானம்... கேட்கவே காமெடியாக இருக்குல...!!!

Advertiesment
Actor Santhanam
, திங்கள், 16 நவம்பர் 2020 (08:00 IST)
சந்தானத்திடம் பாஜகவில் இணையப் போவதாக வெளிவரும் தகவல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 
 
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடக்களில் நடித்திருக்கும் படம் பிஸ்கோத். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. எனவே பிஸ்கோத் படக்குழுவினர் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் சந்தானம். அப்போது அவர் கூறியதாவது, 
 
கொரோனாவுக்குப் பின் வெளியான எனது முதல் படமான பிஸ்கோத் திரைப்படத்தை மக்கள் திரையரங்கில் வந்து பார்ப்பது மகிழ்ச்சி என தெரிவித்தார். சந்தானத்திடம் பாஜகவில் இணையப் போவதாக வெளிவரும் தகவல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 
 
இதற்கு பதிலளித்த அவர், தான் பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எண்ணம் எனக்கில்லை. பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் பிஸ்கோத் திரைப்படத்தை விட காமெடியாக உள்ளது என்று கலாய்த்தார் நடிகர் சந்தானம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கட்சி தொடங்குகிறாரா முக அழகிரி? பரபரப்பு தகவல்