Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

’’கனவு நிறைவேறியது...’’.மணிரத்னம் படத்தில் யோகி பாபு

Advertiesment
ஆந்தாலஜி என்ற நவரசா
, திங்கள், 18 ஜனவரி 2021 (17:37 IST)
தமிழ் சினிமாவில் இளம் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. இவர் தற்போது மிகவும் பிஸியான காமெடி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாக  ஒரு தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் எல்லா முன்னணி நடிகர்களும் சூப்பர் ஸ்டார்களும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றும் விரும்புவார்கள்.

அந்த ஆசை தற்போது யோகி பாவுக்கு நிறைவேறவுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. இவர் தற்போது மிகவும் பிஸியான காமெடி முன்னணி நடிகர்களுடன் நடிகராக நடித்து வருகிறார்.

இந்நிலையில், மணிரத்னம் தற்போது நெட்பிளிக்ஸில், ஆந்தாலஜி என்ற நவரசா வெப் சீரிஸ் தொடர் தயாரித்து வருகிறார்.

இதில் கவுதம் மேனன், ரதீந்தரன் ஆர் பிரசாத், கார்த்திக் நரேன்,  கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி,கேவி ஆனந்த், உள்ளிட்ட இயக்குநர்கள் படத்தை இயக்கவுள்ளனர்.

இதில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது. மேலும், தற்போது நடிகர் யோகி பாபு இந்த வெப் சீரிஸ் தொடரில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் யோகி பாபுவின் கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகை வீட்டில் உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி !