Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாடா ஒருவழியா ஹேப்பி நியூஸ்.... பாலைவனத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் பிரிதிவ் ராஜ் பதிவு!

அப்பாடா ஒருவழியா ஹேப்பி நியூஸ்.... பாலைவனத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் பிரிதிவ் ராஜ் பதிவு!
, திங்கள், 18 மே 2020 (08:41 IST)
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு சென்ற பகுழுவினர் அனைவரும் அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்பினர். ஆனால், மலையாள நடிகர் பிரித்விராஜ் "ஆடுஜீவிதம்" என்ற படத்தில் நடிப்பதற்காக 58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டார்.

ஊரடங்கு காரணத்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவரகள் தாய் நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வருகிறன்றனர். இது பற்றி நடிகர் பிரித்விராஜ் சமீபத்தில் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாக கூறி ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். இந்த தகவல் ஒட்டுமொத்த தென்னிந்திய திரைத்துறையினரையும் உருக்குலைத்தது.

இதனால், அவரது மனைவி மற்றும் குடும்பங்கள் மிகுந்த கவலையில் இருந்துவந்த நிலையில் நேற்று நடிகர் பிரித்விராஜ் ராஜ்ஜிடம் இருந்து ஒரு நல்ல செய்து வந்துள்ளது. அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "ஜோர்டான் பாலைவனத்தில் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்தது" எனக்கூறி பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த நேரத்தில் பரிட்சை தேவையா? பிரபல நடிகர் டுவீட்