Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

இரட்டைக் குழந்தை பிறந்ததால் டபுள் சந்தோஷத்தில் பிரஜின் - சாண்ட்ரா தம்பதி!

Advertiesment
பிரஜின்
, செவ்வாய், 26 மார்ச் 2019 (16:48 IST)
சின்னத்தம்பி சீரியல் மூலம் பலரது ஃபேவரட் நடிகராக மாறியவர் ப்ரஜின். இவரின் மனைவி சாண்ட்ரா தலையணை பூக்கள் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். மீடியா உலகில் கடினப்பட்டு வாய்ப்பை தேடிய இவர்கள் இருவரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தார்கள்.  
 

 
ப்ரஜின் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மனைவி சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த தருணத்திற்காக 10  வருடம் காத்திருந்ததாக தெரிவித்தார்.
 
காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட துணைக்கு யாருமே இல்லை. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம். எங்களை காப்பாற்றி கொள்ள இத்தனை வருடங்கள் வேலை,  வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ப்ரஜின் வேலை இன்றி சில காலம் இருந்தார். தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்" என சாண்ட்ரா கூறியிருந்தார்.
 
webdunia

 
இந்நிலையில் தற்போது இந்த நட்சத்திர தம்பதிகளின் காத்திருப்பிற்கு டபுள் சந்தோஷம் கிடைக்கும் வகையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

35 லட்சம் மதிப்பில் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்!