முதன்முறையாக டப்பிங் பேசிய ரெஜினா

சனி, 5 மே 2018 (13:08 IST)
நடிகை ரெஜினா, முதன்முதலாக டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.


 
திரு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக் – கெளதம் கார்த்திக் இருவரும் அப்பா – மகனாகவே நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ரெஜினா நடித்துள்ளார். அத்துடன், முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பாப்ஃடா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ரெஜினா டப்பிங் பேசியுள்ளார். நிறைய படங்களில் நடித்துள்ள ரெஜினா, டப்பிங் பேசுவது என்பது இதுதான் முதல்முறை.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா