Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்டி பாப்பா பொறக்கப்போகுது... பிறந்தநாளில் குட் நியூஸ் சொன்ன நடிகர் நகுல்!

Advertiesment
குட்டி பாப்பா பொறக்கப்போகுது... பிறந்தநாளில் குட் நியூஸ் சொன்ன நடிகர் நகுல்!
, திங்கள், 15 ஜூன் 2020 (19:57 IST)
நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானனார்.  அதையடுத்து சுனைனாவுடன் சேர்ந்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், செய், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வருகிறார். அந்தவகையில் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த லாக் டவுனில் அவ்வப்போது தனது மனைவி ஸ்ருதியுடன்  சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நகுல் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். "  இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். எதிர்பாராத நேரத்தில் குட் நியூ சொன்ன நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரடியாக OTT தளத்தில் கே.ஜி.எப் 2...? நடிகர் யாஷ் கூறிய தகவல்!