Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் நகுல் - சுனைனா!

Advertiesment
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் நகுல் - சுனைனா!
, செவ்வாய், 26 மே 2020 (11:22 IST)
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி  உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதிலும் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து காதலில் விழுந்தேன் , மாசிலாமணி படத்தை அடுத்து மூன்றாவது முறையாக "எரியும் கண்ணாடி" என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கவுள்ளார். சச்சின் தேவ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறாராம். கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதும் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. இந்த பேவரைட் ஜோடியை இணைத்து மீண்டும் திரையில் காண இருவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரலாகும் டிடியின் ரம்ஜான் ஸ்பெஷல் டான்ஸ் வீடியோ!