பிரபல நடிகையின் தாயார் காலமானார் ...சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்...

ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (16:57 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களுடன் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி, இவர் பிரபல இயக்குநர் ராஜகுமாரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்துவருகிறார். இவரது தம்பி நகுல் இயக்குநர் ஷங்க்ர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானார். இன்று முக்கிய நடிகராக நடித்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் தேவயானியில் தாயார் லட்சுமி ஜெயதேவ்  மரணமடைந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இன்று காலையில் உயிரிழந்தார். தேவயானியின் தாயார் மரணம் அவர்கள் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வங்கக் கடலில் பலத்த காற்று... மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை