Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் !

Advertiesment
marimuthu
, சனி, 9 செப்டம்பர் 2023 (15:48 IST)
தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில்  நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து  நேற்று காலை மாரடைப்பால் காலமானார்.  அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மாலை, சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டு, அவரது உடல் இன்று காலை  11 மணிக்கு அவரது சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
 

அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள   வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், மாரிமுத்துவின் காலை பிடித்துக் கொண்டு அவர் தாயார் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஊரில் உள்ள பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர், ஆம்புலன்ஸில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு,  தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில்  நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதி குணசேகரன் கேரக்டரில் இந்த நடிகரா? சரியான தேர்வு தான்..!