சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஜி மாரிமுத்து நேற்று எதிர்பாராத வகையில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவு சின்னத்திரை உலகினர்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிரபல குண சித்திர நடிகர் வேலராமமூர்த்தி அந்த கேரக்டரில் அடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜி மாரிமுத்து அவர்களுக்கு இணையாக வேலராமமூர்த்தி நடிப்பு இருக்கும் என்பதால் சரியான தேர்வு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.