Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு- விஜயகாந்த்

Advertiesment
Rajkiran
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:45 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால்  காலமானார். அவரது மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், சினிமாவின் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடமும்  உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

அதன்பின்னர், கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் மிஷ்கின் இவரை யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து, நிமிர்ந்து நில், கொபம்பல், மருது ஆகிய படங்களில் நடிகராக முத்திரை பதித்தார்.

சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் நடித்து வந்த நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார்.  அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு  திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் .நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’
என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்டேஜ் ஸ்டைலில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!