ஜாய் கிரிசில்டா குழந்தையின் தந்தை தான்தான்.. மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புதல்

Mahendran
செவ்வாய், 4 நவம்பர் 2025 (15:59 IST)
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
 
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரை அடுத்து மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையின்போது, ஜாய் கிரிசில்டாவை தான் இரண்டாவது திருமணம் செய்ததாகவும், சமீபத்தில் பிறந்த குழந்தையின் தந்தை தான்தான் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார்.
 
ரங்கராஜ், திருமண மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 
 
மேலும், சட்ட நடவடிக்கை முடியும்வரை குழந்தையின் பராமரிப்புச் செலவையும் ரங்கராஜ் ஏற்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்