Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

Advertiesment
கார்த்தி

Siva

, திங்கள், 21 ஜூலை 2025 (17:56 IST)
நடிகர் கார்த்தி கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு படத்தையாவது ரிலீஸ் செய்து வருகிறார். ஆனால், 2025 ஆம் ஆண்டு அவர் எந்த படத்தையும் வெளியிட வாய்ப்பில்லை என்பதால், அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, கார்த்தி ஒவ்வொரு வருடமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை ரிலீஸ் செய்துள்ளார். இடையில் 2020 ஆம் ஆண்டு மட்டும் அவர் எந்த படத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், அதற்கு ஈடு செய்யும் வகையில் 2019 ஆம் ஆண்டு 'கைதி', 'தேவ்', 'தம்பி' என மூன்று படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது அவர் 2025 ஆம் ஆண்டை தவறவிடுகிறார். அவர் நடித்த 'வா வாத்தியாரே' படம் வெளியீட்டிற்கு கிட்டத்தட்ட தயாராக இருந்தாலும், படத்தின் சில காட்சிகள் நிலுவையில் இருப்பதால், அந்த படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவில்லை. மேலும், 'சர்தார் 2' திரைப்படம் இந்த ஆண்டுக்குள் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றாலும், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தான் இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
 
எனவே, 2025 ஆம் ஆண்டு கார்த்தி படம் எதுவும் ரிலீஸ் ஆகாத ஆண்டாக இருக்க போவதால், ரசிகர்கள் அதிர்ச்சியுடன் உள்ளனர். ஆனால், அதே நேரத்தில், அடுத்த ஆண்டு 'சர்தார் 2', 'வா வாத்தியாரே மற்றும் 'மார்சல்' என மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு ஒரு விருந்தாக அமையும் என நம்பலாம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?