Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதனை படைத்த KGF-2 டீசர்...சினிமாவில் புதிய மைல்கல் !

Advertiesment
சாதனை படைத்த KGF-2 டீசர்...சினிமாவில் புதிய மைல்கல் !
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (20:40 IST)
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில்,கேஜிஎஃப் படத்தின் டீசர் வரும் ஜனவரி 8 ஆம் தேதி

வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் நேற்றிரவு இப்படத்தின் டீசரின் ஒரு பகுதியை படக்குழு வெளியிட்டது.

 
பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சேர்ந்துள்ளனர்.

 
இந்நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி, காலை 10;18க்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலயில் தற்போது கே.ஜி.எஃப் படக்குழு இப்படத்தின் டீசரின் ஒரு பகுதியை நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் செம ஸ்டைலிஸாக உள்ள யாஷ், ரசிகர்களுக்கு விருந்து வைப்பது போன்று ஆக்சன் காட்சிகள் அதிகமுள்ளது. டீசர் வெளியான குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனைபடைத்துள்ளது.#KGFChapter2 #Yash #RockyBhai
 
அதாவது 19 மணிநேரத்தில் இந்த டீசை 50 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.,  100 மில்லியன் பார்வையாளரக்ளை நோக்கிச் சென்றுகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  இதுவரை 3.5 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது.
#KGFChapter2Teaser
 
மேலும், kgfchapter2 இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayYash #KGFChapter2Teaser #KGFChapter2
@TheNameIsYash


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டரை ஓரங்கட்டிய KGF 2 டீசர் - தளபதி ரசிகர்களுக்கு திகில் கொடுத்த ராக்கி பாய்!