Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் ரஜினி, கமல், நானி படங்களில் நடிகை அபிராமி.. குவிந்து வரும் வாய்ப்புகள்..!

Siva
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (16:57 IST)
ஒரே நேரத்தில் ரஜினியின் வேட்டையன், கமல்ஹாசனின் தக்லைப், நானியின் சூர்யாவின் சாட்டர்டே ஆகிய படங்களில் நடித்து வரும் விருமாண்டி அபிராமிக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், இதனால் அவரது காட்டில் மழை என்றும் கூறப்படுகிறது.

விருமாண்டி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அபிராமி சில ஆண்டுகள் திரையுலகம் பக்கம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி ஆகியுள்ளார்.

குறிப்பாக ரஜினியின் வேட்டையன், கமல்ஹாசனின் தக்லைப், சூர்யாவின் சாட்டர்டே ஆகிய படங்களில் நடித்து வரும் அபிராமிக்கு பல அம்மா கேரக்டர்கள் வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு சினிமாவில் அம்மா கேரக்டரில் நடிக்க பிரபல நடிகைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதால் அபிராமிக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சூர்யாவின் சாட்டர்டே படத்தில் நானி அம்மா கேரக்டரில் அபிராமி நடித்து அசத்தியுள்ளதாகவும் அவரது நடிப்பை பார்த்து பல இயக்குனர்கள் அவரிடம் தொடர்பு கொண்டு அம்மா கேரக்டர் வாய்ப்புகளை தந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
அதைப்போல் தமிழிலும் சரண்யாவை விட்டால் அம்மா கேரக்டருக்கு வேறு நடிகைகள் இல்லை என்பதால் ஒரு சில அம்மா கேரக்டர்கள் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments