சூர்யா நடித்த 'கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையின் திரைப்படமும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 'கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சூர்யாவை பொருத்தவரை எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் கழித்து வெளியாகும் திரைப்படம் 'கங்குவா. இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தான் சூர்யாவின் எதிர்கால திரை உலக வாழ்க்கையை நிர்ணயிக்கும் படம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆவதாகவும் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியின் போது தெரியாமல் ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகலாம், ஆனால் இரண்டாம் பாகத்தின் போது எந்த படமும் பக்கத்தில் கூட வராது என்றும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
ஆனால் தற்போது வேட்டையன் படத்தின் ரிலீஸ் காரணமாக 'கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva