Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்ன குழந்தைன்னு கூட பார்க்காமா இப்படியா..? அனிகாவிற்காக பொங்கி எழுந்த அபிராமி!

சின்ன குழந்தைன்னு கூட பார்க்காமா இப்படியா..? அனிகாவிற்காக பொங்கி எழுந்த அபிராமி!
, புதன், 5 ஆகஸ்ட் 2020 (10:17 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் அனிகா பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு இணயவாசி ஒருவர், " நீங்கள் ரொம்ப ஹாட்டா, செக்ஸியா இருக்கிறீர்கள் ஐ லவ் யூ" என்று மோசமாக கமெண்ட் செய்திருந்தார். கமெண்ட் செய்த அந்த நபருக்கு போன் செய்த பிரபல யூடியூப் புகழ் பிலிப் பிலிப், ஒரு 15 வயது குழந்தையை குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த உங்கள் மீது போஸ்கோ சட்டம் போட முடியும் என்று மிரட்டி இருந்தார். 
 
இந்த வீடியோவை தற்ப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை அபிராமி, " குழந்தையை கூட விட்டு வைக்காத இது போன்ற அனைத்து சைபர் புல்லிஸ் (அவதூராக பேசுபவர்கள் ) தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற நபர்களை பார்க்க அசிங்கமாக இருக்கிறது. என்று பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தை குறித்து காட்டமாக பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படத்தில் என்னுடைய "கேரக்டர் நேம்" இதுதான் - சீக்ரெட்டை உடைத்த மாளவிகா!