காதலுக்கு மரியாதை வெளியாகி 23 ஆண்டுகள்… வெளிவராத சுவாரஸ்ய தகவல்!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:22 IST)
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

நடிகர் விஜய் தனது தந்தையால் அறிமுகப்படுத்தப் பட்டு கிட்டத்தட்ட பி கிரேட் படங்களுக்கு நிகரான படங்களில் நடித்து வந்தார். அவருக்கு முதல் வெற்றியையும் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்த திரைப்படம் என்றால் அது விக்ரமனின் பூவே உனக்காக. அதன் பிறகு அவரின் இரண்டாவது ஹிட் படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை திரைப்படம். இந்த படத்தை மலையாள இயக்குனர் பாசில் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் ஷாலினி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்த படம் வெளியாகி இப்போது 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதைக் கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி வந்தனர். இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது விஜய் இல்லையாம். அப்போது சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸ்தானாம். ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் படத்தில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் விஜய் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – மாஸ்க் படத்தின் ரிசல்ட் குறித்து கவின்!

அடுத்த கட்டுரையில்
Show comments