Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்கனா ரனாவத் சகோதரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்! இதுதான் காரணம்!

Advertiesment
கங்கனா ரனாவத் சகோதரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்! இதுதான் காரணம்!
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:31 IST)
நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டனின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் எந்த விதமான சமூகவலைதளங்களிலும் இல்லை. அவரது கருத்துகளை தனது சகோதரி ரங்கோலி சாண்டனின் டிவிட்டர் கணக்கு மூலமாக தெரிவித்து வந்தார். கடந்த வாரம் இந்தியாவில் தேர்தலை ரத்து செய்துவிட்டு மோடியையே மீண்டும் பிரதமராக அறிவிக்க வேண்டும் எனற சர்ச்சையான டிவீட்டைப் பகிர்ந்திருந்தார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட  சமுதாயத்தைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாகவும் ஒரு டிவிட்டைப் பகிர்ந்தார். இந்நிலையில் அவரது டிவீட்டுக்குப் பலரும் புகாரளிக்க அந்த டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ரங்கோலி டிவிட்டர் இந்தியாவுக்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.

அவரது பேச்சில் ‘டிவிட்டரில் இந்துக் கடவுள்களை, இந்திய அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்யலாம். காவல்துறை மீது கல்லடிப்பவர்களைப் பற்றி ஏதாவது சொன்னால் உங்கள் கணக்கை ரத்து செய்துவிடுவார்கள். அதனால் எனது கணக்கை நான் மீட்கப்போவதில்லை. நான் எனது சகோதரியின் செய்தித் தொடர்பாளராக இருந்தேன். இனி அவரது நேரடிப் பேட்டிகளைப் பாருங்கள். அவரைப் போன்ற நட்சத்திரம் ஒருவரின் செய்தி உங்களை சென்றடைய பல வழிகள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 வருடங்களாக சலிக்காமல் எழுதி வரும் அமிதாப் பச்சன்! ரசிகர்களுக்கு நன்றி !