Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிஎஸ்கே மேட்ச் தினத்தில் வெளியாகும் ‘விசில் போடு’ பாடல்.. ‘கோட்’ அப்டேட் கொடுத்த விஜய்..!

Advertiesment
சிஎஸ்கே மேட்ச் தினத்தில் வெளியாகும் ‘விசில் போடு’ பாடல்.. ‘கோட்’ அப்டேட் கொடுத்த விஜய்..!

Siva

, ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (12:37 IST)
நடிகர் விஜய் நடித்துவரும் ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில் சற்றுமுன் இந்த பாடலின் டைட்டில் விசில் போடு என விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பாடலை விஜய் பாடிய உள்ளதாகவும் மதன் கார்க்கி எழுதி உள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா என் கம்போஸ் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 விசில் போடு என்ற பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இன்று இரவு ஏழு முப்பது சிஎஸ்கே போட்டியும் ஆரம்பமாக உள்ளதால், கோட் படத்தின் பாடல் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரண்டுக்கும் சேர்த்து விசில் போடு என நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு..! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!