Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதக் கவனீச்சீங்களா?... விஜய்யின் கோட் பட பாடலில் அஜித்தின் மங்காத்தா ரெஃபரன்ஸ்!

Advertiesment
இதக் கவனீச்சீங்களா?... விஜய்யின் கோட் பட பாடலில் அஜித்தின் மங்காத்தா ரெஃபரன்ஸ்!

vinoth

, திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:36 IST)
விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அந்த படத்தின் முதல் பாடலான விசில் போடு ரிலீஸ் ஆகியுள்ளது.

‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா.. Campaign தான் தொறக்கட்டுமா.. மைக்கை பிடிக்கட்டுமா?” என தனது அரசியல் வருகையை உணர்த்தும் விதமான வரிகளை பாடியுள்ளார் நடிகர் விஜய். விஜய் அரசியல் வருகை குறித்தும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது இந்த பாடல். இந்நிலையில் இந்த பாடலின் லிரிக் வீடியோவில் இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களின் டைட்டில் டிசைனும் இடம்பெற்றுள்ளது. அதில் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தின் ரெஃப்ரன்ஸும் இடம் பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது - வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி