Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடிடியில் வெளியாகும் முத்தையா முரளிதரனின் ‘800’: இலவசமாகவே பார்க்கலாம்..!

ஓடிடியில் வெளியாகும் முத்தையா முரளிதரனின் ‘800’: இலவசமாகவே பார்க்கலாம்..!
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (17:21 IST)
முன்னாள் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 800 என்பதும் இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது என்பது தெரிந்ததே.
 
இந்த படம் தமிழ் உள்பட ஆறு மொழிகளில் உருவான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஜியோ சினிமா என்ற ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி மற்றும் சிங்களம் ஆகிய 6 மொழிகளில் இந்த படம் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
டிசம்பர் இரண்டாம் தேதி முதல் ஜியோ சினிமாவில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ சினிமா அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜியோ சினிமா கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை இலவசமாக வழங்கி உள்ள நிலையில் தற்போது திரைப்படங்களையும் இலவசமாக வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணமோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவருக்கு நோட்டீஸ்