Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ODI: இந்திய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

Advertiesment
Indian Team
, திங்கள், 18 செப்டம்பர் 2023 (17:44 IST)
ஆஸ்திரேலிய ஆணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இந்திய அணியை இன்று இரவு 8:30 மணிக்கு அறிவிக்கிறது பிசிசிஐ அணி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கு முன்னர் நடக்க உள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் உள்ள தொடராக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரை இந்தியாவில் வயாகாம் 18 நிறுவனம் ஒளிபரப்புகிறது. இந்த தொடரை ஜியோ சினிமாஸ் நிறுவனம் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இந்திய அணியை இன்று இரவு 8:30 மணிக்கு அறிவிக்கிறது பிசிசிஐ அணி.

இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராம் ஹர்த்திக் பாண்டியா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபடலாம் என தகவல் வெளியாகிறது.

மேலும், ஆசிய கோப்பையில், வங்கதேசத்திற்கு எதிராக தோற்றதால் பின் தங்கியுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றினால் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தோனி இந்திய அணிக்காக தியாகம் செய்துள்ளார்'- காம்பீர்