Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணமோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவருக்கு நோட்டீஸ்

nameetha, sowthri
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:45 IST)
பணமோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவருக்கு  நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் அங்குள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன்  சிறுகுறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் ஆல் இந்தியா தலைவர் எனக் கூறினார். அந்த அமைப்பின்  தமிழகக சேர்மன் பதவி தருவதாக கூறி ரூ.3.50 கோடி கேட்டார். நான் ரூ.50 லட்சம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டு எனக்குப் பதவி தரவில்லை.பணத்தைக் திருப்பிக் கேட்டேன். அதற்கு நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் ரூ.4 கோடி பெற்று பதவியை கொடுத்ததாக கூறியுள்ளார். என் பணத்தில் ரூ.9 லட்சம் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதி ரூ.41லட்சம் தராமல் ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த  MSME மோசடி புகாரில் நமீதாவின் கணவர் சவுத்ரி , பாஜக ஊடகபிரிவு தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி சேலம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்முட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல்- தி கோர்' பட டிரைலர் ரிலீஸ்