Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 'Invisible' ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது, எப்போது Visible ஆவார்: தமிழிசை

Advertiesment
Tamilisai Soundarrajan

Siva

, ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (11:07 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இன்று  ஒரு வருடம் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் இது குறித்து அவர் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் ஒரு வருடம் நிறைவு பெற்றதற்கு அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிற அரசியல் கட்சி தலைவர்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து கூறியதாவது: 
 
நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் 'Invisible' ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை. 
 
அவர் களத்துக்கு இறங்கி வந்து மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சி. 
 
ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு அது போல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும், Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது"
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வு அட்டவணை.. தேசிய தேர்வு முகமை வெளியீடு..!