Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

vinoth
திங்கள், 19 மே 2025 (10:05 IST)
2004 ஆம் வெளியான 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தனர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தம் ஆகினர்.  சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் செல்வராகவன் ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கப்பட்டது. பைனான்ஸ் காரணமாக படம் விட்டு விட்டு ஷூட்டிங் நடந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் செல்வராகவன் “7 ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. படத்தை கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments