Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியீட்டிற்கு முன்பே 50-க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிய சாப்ப குத்து!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (10:01 IST)
வெளியீட்டிற்கு முன்பே 50 க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிய சாப்ப குத்து என்ற மலையாள படம் விரைவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்…


இப்படத்தின் இயக்குனர்கள் அஜேஷ் சுதாகரன், மகேஷ் மனோகரளின் முதல் படம் இது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஜாலி ஷிபு ஜெ எஸ் எண்டர்டெய்ன் மெண்ட்பேனரில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஹிமா சங்கரி, லோகேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இதன் இசையமைப்பாளர் ஷிபு கல்லார் படத்தின் 4 பாடல்களை அருமையான பின்னணி இசையில் மிக சிறப்பாக ஷிபு கல்லார், நந்து சஷிதரன் ஆகியோர்கள் எழுதியிருக்கிறார்கள். பாடல்களை மிகவும் சிறப்பான முறையில் சின்னக்குயில் சித்ரா, உன்னி மேனன், மது பால கிருஷ்ணன், சரத் சந்தோஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இதன் ஆடியோ உரிமையை சைனா ஆடியோ &வீடியோ விஷன் வாங்கியுள்ளது.

ஜாலி ஷிபு ஒரு சிறந்த பிற மொழி பட மொழி பெயர்ப்பாளர் அவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , தமிழகத்தின் பல ஹிட் படங்களை தெலுங்கு , கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி வழி  மாநிலங்களுக்கு மாற்றித் தந்தவர். அவைகளில் குறிப்பாக ஜெய் பீம், லவ் டுடே, சூரரைப்போற்று, லியோ, மார்க் அன்டனி,ஜிகர் தண்டா 2, கோப்ரா, பிச்சைக்காரன்2, குட்நைட், மாஸ்டர், மகான், RDX, கன்ஜுரிங் கண்ணப்பன், போன்ற மிகச்சசிறந்த படங்கள் அடங்கும்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரரைலர் வெளியீட்டு விழா திருவனந்தபுரம் எஸ் பி கிராண்டேய்ஸ் என்ற தனியார் விடுதியில் டிசம்பர் (7 /12/2023 ) அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை சமஸ்காரிக பிரவர்த்தக பிரதிநிதி போர்டு ஆர்ட்டிஸ்ட் மதுபால், சுரேஷ் குமார் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரது தலைமையில் நடைபெற உள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக டப்பிங் ஆர்டிஸ்ட் பாக்ய லெஷ்மி, இயக்குனர் ரஞ்சித், பி ராகேஷ் (secretory producer's association) பி எம் பாவா (சைனா ஆடியோ & வீடியோ விஷன்) ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments