ப்ரதீப், விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த நயன்தாரா!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (08:11 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பட்ஜெட்டாக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ப்ரதீப், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் சம்பளமே இதில் பாதி தொகைக்கு மேல் வந்துவிடுமென தெரிகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அவர் பிரதீப்புக்கு சகோதரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments