Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்டகாசமான விஷுவல்களோடு கவனம் ஈர்க்கும் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் டீசர்!

அட்டகாசமான விஷுவல்களோடு கவனம் ஈர்க்கும் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் டீசர்!
, வியாழன், 7 டிசம்பர் 2023 (07:47 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இப்போது மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்ற பேன் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

இந்த படம் ஜனவரி 25, 2024 அன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. லிஜோ ஜோஸின் வழக்கமான படங்களைப் போலவே காட்சிரீதியான அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே இந்த டீசரும் உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலட்சியமும் பேராசையுமே காரணம்… சென்னை வெள்ளம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கோபம்!