Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து தமிழ் இயக்குனர்கள் இணையும் ஒரே படம்! – ஓடிடியில் வெளியிட திட்டம்!

ஐந்து தமிழ் இயக்குனர்கள் இணையும் ஒரே படம்! – ஓடிடியில் வெளியிட திட்டம்!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (18:15 IST)
தமிழ் சினிமாவின் ஐந்து இயக்குனர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி படம் ஒன்று ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஒரே மாதிரியான ஜானரில் வெவ்வேறு கதைகளை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரே படமாக வெளியிடுவது ஆந்தாலஜி என்று கூறப்படுகிறது. உலக அளவில் இந்த ஆந்தாலஜி படங்கள் பிரபலமாக உள்ள நிலையில் இந்தியிலும் லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ் பொன்ற சில ஆந்தாலஜி படங்கள் கவனம் பெற்றன. இந்நிலையில் தமிழிலும் ஐந்து இயக்குனர்களை வைத்து ஆந்தாலஜி படம் ஒன்று உருவாக உள்ளது.

அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா, கௌதம் மேனன், சுஹாசினி மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஆகியோர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு உடையில் பரபரப்பை கிளப்பிய ஆண்ட்ரியா!