கொரோனா பாதிப்பால் திரைத்துறையே ஸ்தம்பித்துள்ள நிலையிலும் ‘அவதார் 2’ படத்தை சொன்ன தேதியில் வெளியிட தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
	 
	பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தற்போது கொரோனா பாதிப்புகளால் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த அவதார் 2 படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும் ஏற்கனவே முடிக்கப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதான கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்டவற்றிற்கு பணியாளர்களை வீட்டிலிருந்தே தயார் செய்யுமாறு கூறியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
 
									
										
			        							
								
																	இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாவதாக முன்னரே அறிவித்திருந்த ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ”உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடக்கம் கண்டுள்ளன. நியூஸிலாந்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அவதார் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும் எனவும், இப்படத்தின் மூன்றாம் பாகம் 2023 ஆம் ஆண்டு, டிசம்பரில் வெளியாகும், 5 ஆம் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் ’என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார்.
 
									
											
									
			        							
								
																	இந்நிலையில், இந்தப் பாகங்களை படமாக எடுக்க 1 பில்லியன் டாலர் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த தொகை நம் இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் அவதார் -2 படத்தின் படப்பிடிப்பும்  95% முடிவடைந்துவிட்டதாகவும் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	எனவே அவர் சொன்னபடி வரும்  2022 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அவர்தார் 2 படமும், அடுத்த 2024 ஆம் ஆண்டு டிசம்பட் 20 ஆம் தேதி அவதார் -3 படமும் ரிலீசாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.