தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சித்தார்த் நடிக்கும் 40 வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு “சித்தா” என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் சித்தார்த், பிறகு கடந்த ஆண்டு கமல்ஹாசனுடன் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் நாற்பதாவது திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே “எட்டு தோட்டாக்கள்” உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்தாலும், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கும் நிலையில், மற்றொரு முக்கிய கேரக்டரில் தேவயானி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கு "3BHK" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி அம்சத்துடன் கூடிய கதை கொண்ட இந்த படம் சித்தார்த்துக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.